Thursday, May 22, 2014

Poem - Freedom


The following poem(?) just flowed in about 5 odd minutes flat to my tremendous surprise. Though it conveyed nothing new, the flow and the fact that it came without a pause, prompted me to share it in blog. Here I go

Quote

"விடுதலை" 

விதியை மதியால் வெல்லலாம் என்கிறது ஒரு வசனம் 

ஆனால் அதுவும் ஒரு விதிதானேடா  என்கிறது என்னுடைய வசனம் 

விதியை பிடித்து தொங்கிக்கொண்டு விதாதாவையே மறந்து விட்டு 

அவனுக்கு பாக்யவிதாதா என்கிற பட்டதையும் குடுத்து விட்டதை என்ன வென்பது ?

பாக்கியம், அபாக்கியம் என்பது கிடையாது என்கிறதை என்று அறிவாயடா மடையா ?

விதி என்கிறது மதியின் படைப்பு, ஒரு அழுக்கு கண்ணாடி போல . 

அழுக்கை துடைத்து என்றைக்கு பார்க்கிறாயோ அன்றைக்கு விடுதலை. 

எப்படி என்று கேட்கிறாயா? கேள், சொல்லுகிறேன். 

மதியில் மறைந்தது விதி , விதியில் மறைந்தது விதாதா ,

அந்த விதாதா நீயேதான் என்று என்னிக்கி அறிவாயோ 

அப்பொழுது அந்த விதிக்கும்   உனக்கும் சம்பந்தம் இல்லை என்கிறது புரியும் 

மதி, விதி, விதாதா எல்லாமே மறைந்து நான்தான் எல்லாவற்றையும் படைத்தேன் என்கிற ஞானம் வரும்.

எந்த விதமான உணர்வுகளும்,  உடலுக்குத்தான் என்று புரிந்து 
மோஹம் விலகி, நான், நீ, அவன், மதி, விதி, விதாதா எல்லாமே மறைந்து 

இரன்டில்லாத ஒன்று என்கிற ப்ரஹ்மமே மிஞ்சும் 
அப்பொழுதுதான் விடுதலை, சுகம், ப்ரஹ்மானந்தம். 

இந்த தேஹத்தில் உள்ள பற்றுதல் நீங்கி மோஹம் விலஹின பரிபக்குவம் என்றைக்கு வரும் என்கிற கதறலான ஏக்கம் தான் 
அந்த பிரம்ம ஐக்ய நிலையை அடைய ஒரே வழி.

இதை மறந்து,விதி, மதி, விதாதா, என்கிற விவாதத்தில் 
சிக்கி , சக்கு மாடு போல் சுத்தி சுத்தி வந்து கொண்டு 
முட்டளைப்போல் ஒரு நோக்கமில்லா வாழ்க்கைதான் 
சுகம், என்று நம்பிநேயானால் விதாதா என்ன பண்ணுவான் ?

எழுந்திரு, ஓடு, ஒரு நிமிடமும் வீணாக்காமல் அவனை நினை. 
அவன் உனக்கு பகுத்தறிவை கொடுக்கும் வரை விடாதே. 

கஷ்டம் தான் ஆனால் முடியாதது அல்ல,
நம்பிக்கை தான் முக்கியம், விடுதலை நிச்சயம் .

*******      
Unquote

Ekalavya alias Vichu

1 comment:

  1. The truth of non dualism it is said is impossible to capture in words. Yet when Grace chooses to break Its Absolute Silence ever so briefly through a chosen one to unravel Its mystery in words, the joy of Its embrace and a glimpse of Its truth cannot be contained and must overflow. What an enviable experience you have gone through!
    "Liberation is certain" is so reassuringly unconditional that "Faith is crucial indeed" seems like the last conscious thought that will dissolve into a complete oneness ( Ayikyam ) with our Source. May we be liberated thus in our present lives. God bless us all.

    Gulpa

    ReplyDelete